மார்கழி மாத பிறப்பையொட்டி அருணாசலேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை

மார்கழி மாத பிறப்பையொட்டி அருணாசலேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மார்கழி மாதம் பிறப்பு
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த 12–ந்தேதி மகா தீபத்திருவிழா நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இந்த நிலையில் கார்த்திகை மாதம் நேற்றோடு முடிவடைந்து மார்கழி மாதம் பிறந்தது. மார்கழி மாத பிறப்பையொட்டி கோவில்களில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.

சாமிக்கு தங்க கவசம்
பின்னர் சாமிக்கு தங்க கவசம், அம்மன் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அம்மன் சன்னதியில் உள்ள நவக்கிரக சன்னதியில் பெண்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர். மார்கழி மாதம் பிறப்பையொட்டி நேற்று அதிகாலையில் பக்தர்கள் மலையை சுற்றி கிரிவலம் சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *