திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.97 லட்சம்

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலுக்கு பக்தர்கள் ரூ.97 லட்சம் காணிக்கை செலுத்தி உள்ளனர்.
இந்தக் கோயிலில் மாதந்தோறும் உண்டியல் காணிக்கை எண்ணப்படுகிறது. அதன்படி, பிப்ரவரி மாதத்துக்கான காணிக்கை எண்ணும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில், ரூ.96 லட்சத்து 96 ஆயிரத்து 210 ரொக்கம், 240 கிராம் தங்கம், 510 கிராம் வெள்ளியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தது தெரியவந்தது.
ரொக்கப் பணம் கோயில் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. தங்கம், வெள்ளி நகைகள் கோயில் பொக்கிஷ அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *