அரசியல்வாதிகளை கடத்த சதித் திட்டம்: 2 பேர் கைது

வந்தவாசி அருகே சதித் திட்டம் தீட்டியதாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

வந்தவாசி தெற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜெய்சங்கர் தலைமையில் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை ரோந்து சென்றனர். வந்தவாசி-மேல்மருவத்தூர் சாலை, சென்னாவரம் புற்றுக் கோயில் அருகே செல்லும்போது சாலையோர புதரில் இருவர் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனராம்.
சந்தேகமடைந்த போலீஸார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில், அவர்கள் இருவரும் சென்னாவரம் கிராமத்தைச் சேர்ந்த வீரபெருமாள் (31), சக்திவேல் (24) என்பதும், அரசியல்வாதிகளை கடத்த சதித் திட்டம் தீட்டிக் கொண்டிருந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸார் வீரபெருமாள், சக்திவேல் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *