தெள்ளாரில் ரூ. 5000 லஞ்சம் வாங்கிய வேளாண்மை அதிகாரி கைது

வந்தவாசி தாலுகா குண்ணகம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 51), விவசாயி. இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் மணிலா சாகுபடி செய்வதற்காக மானியத்தில் சொட்டுநீர் பாசனம் அமைக்க முடிவு செய்தார். இதற்காக தெள்ளார் வேளாண்மை அலுவலகத்திற்கு சென்று மனு கொடுத்திருந்தார்.

இந்த திட்டத்தின் கீழ் முழுமானியத்தில் சொட்டுநீர் பாசனம் அமைக்க உதவி வேளாண்மை அதிகாரி குமார் என்பவர் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத கனகராஜ், பணம் தருவதாகக்கூறிவிட்டு சென்றார். பின்னர் இதுபற்றி அவர் திருவண்ணாமலையில் உள்ள லஞ்சஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

கையும் களவுமாக கைது
அதைத்தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்ட லஞ்சஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கனகராஜிடம் கொடுத்து அதை உதவி வேளாண்மை அதிகாரி குமாரிடம் கொடுக்குமாறு அனுப்பிவைத்தனர். அதன்பேரில் நேற்று கனகராஜ், தெள்ளாரில் உள்ள வேளாண்மை அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த உதவி வேளாண்மை அதிகாரி குமாரிடம் கொடுத்தார்.

அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்சஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணப்பெருமாள் தலைமையிலான போலீசார் சென்று உதவிவேளாண்மை அதிகாரி குமாரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

5 thoughts on “தெள்ளாரில் ரூ. 5000 லஞ்சம் வாங்கிய வேளாண்மை அதிகாரி கைது

  • May 12, 2017 at 9:36 am
    Permalink

    கோடிக்கணக்கான பணம் லட்சக்கணக்கான பணம் லஞ்சம் வாங்கும் பெரிய பெரிய ஆட்களை இதுபோன்று போலீஸ் அதிகாரிகள் கைது செய்யாதது ஏன் ????

    1000 , 5000 வாங்கும் இவர்களுக்கு மீடீயாக்கள் கொடுக்கும் built-up களில் கொஞ்சமாவது அவர்களுக்கு கொடுக்கலாம்……

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *