தென்னாங்கூரில் இலவச இசைப்பயிற்சி முகாம்

சுதந்திர தினத்தை முன்னிட்டு வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கோச்சிங் சென்டர் தேசபக்தி பாடல்கள் இலவச இசைப்பயிற்சி முகாம் தென்னாங்கூர் ஊ.ஒ.நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மைய முதல்வர் பா. சீனிவாசன் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியை திருமதி. கோமதி அவர்கள் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக, தென்னாங்கூர் ஞானநந்தகிரி பீடம் மடாதிபதி பூஜ்யஸ்ரீ நிரஞ்சனானந்த கிரி ஸ்வாமிகள் பங்கேற்று, மாணவர்களுக்கான இசைப்பயிற்சி புத்தகத்தை வழங்கி தொடங்கி வைத்தார். மேலும் நிகழ்ச்சியில் தென்னாங்கூர் கலைக் கல்லூரி முதல்வர் முனைவர் யுவராசன் அவர்கள் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார். இசைப் பயிற்சியை தெள்ளார் அ.ம.உ.நி.பள்ளி இசையாசிரியர் டி.பி.வெங்கடேசன் மாணவர்களுக்கு வழங்கினார். முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் திரு தினகரசு, இளைஞர் மன்ற நிர்வாகி காளிதாஸ், விவேகானந்தர் தொண்டு மைய நிர்வாகி சுரேஷ்பாபு, சமூக ஆர்வலர்கள் வந்தை குமரன், வந்தை பிரகாஷ் ஆகியோர் பங்கேற்று பேசினர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *