நாளை வந்தவாசி தவளகிரீஸ்வரர் ஆலய கார்த்திகைத் தீபத் திருவிழா

அருள்மிகு தவளகிரீஸ்வரர் திருக்கோயில் திருக்கார்த்திகைத் தீபத் திருவிழா நாளை (02.12.17)  சனிக்கிழமை  நடைபெறவுள்ளது. மேலும் காலை 4 மணியளவில் கீழ்க்கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டு, திருமுகப்பெருமான புறப்பட்டு திருமலை அடிவாரத்தில் எழுந்தருளுவார். பின்னர் மலைக்கோயிலில் எழுந்தருளியுள்ள தவளகிரீஸ்வரப் பொருமானுக்கு அபிஷேகம் நடத்தப்படுகிறது. மாலை 6 மணியளவில் தவளகிரி (மலைமீது) திருக்கார்த்திகைத் தீபம் ஏற்றப்படுகிறது.

இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் அவர்களும், நாடாளுமன்ற உறுப்பினர் செஞ்சி சேவல் வெ.ஏழுமலை , வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் எஸ். அம்பேத்குமார் மற்றும் செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் தூசி. கே.மோகன் அவர்களும் கலந்துக்கொள்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *